F "DEEN WE NEED" --- வகுப்பில்: November 2011

Tuesday, November 29, 2011

வேதங்கள்


வேதங்களின் மீது எவ்வாறு ஈமான் கொண்டாய்?


One must believe that Allah revealed Heavenly Books to His Messengers in order to convey them to mankind.

1.     Allah has revealed His Books to various Prophets for the guidance of their nations.
2.     These Books during their times contained nothing but the truth.

3.      The big Books are called KITAABS whilst the small ones are called Suhuf. 
4.     All these Books advocated basically the same message

1.       வேதங்கள்,சுஹுஃபுகள் அனைத்தும் அல்லாஹ்வின் திருவசனங்கள் என்றும், உண்மையானவை என்றும்
2.       மொத்தம் 4வேதங்களும்,110சுஹுஃபுகளும் அல்லாஹ்வால் நபிமார்களுக்கு வழங்கப் பட்டன என்றும் அறிந்து ஈமான் கொண்டேன்.


  1. தவ்ராத்து வேதம் மூஸா நபிக்கு அப்ரானி பாஷையிலும்,
  2. ஜபூரு வேதம் தாவூது நபிக்கு யூனானி பாஷையிலும்
  3. இன்ஜீலு வேதம் ஈஸா நபிக்கு சுர்யானி பாஷையிலும்
  4. ஃபுர்க்கான் வேதம் முஹம்மது நபிக்கு அரபி பாஷையிலும் அருளப்பட்டதாகும்.
சுஹ்ஃபுகள் என்பது அல்லாஹ்வின் வேதக்கட்டளையாகும்.
ஆதம் நபி--10சுஹுஃப்கள்
ஷீது நபி—50சுஹுஃப்கள்
இத்ரீஸு நபி—30சுஹுஃப்கள்
இப்ராஹீம் நபி--10சுஹுஃப்கள்
மூஸா நபி—தவ்ராத்துடன் 10சுஹுஃபுகளும்
அல்லாஹ்வால் அருளப் பட்டன.

  1. 1.       எல்லா சுஹ்ஃபுகள்,வேதங்களை விட குர்ஆன் மிகவும் மேன்மையானது.
  2. 2.       குர்ஆனை கொண்டு மற்ற எல்லா வேதங்களும்,சுஹ்ஃபுகளும் மாற்றப் பட்டுவிட்டன.
  3. 3.       குர்ஆனாகிறது கியாமத் நாள் வரையிலும் மாற்ற முடியாது என்றறிந்து ஈமான் கொண்டேன்.

Monday, November 14, 2011

ரஸூல்மார்கள்


ரஸூல்மார்கள்,நபிமார்களைக் கொண்டு எவ்வாறு அறிந்து ஈமான் கொண்டாய்?

God communicates His guidance to mankind through human prophets. Muslims believe that it is through Allah's grace and benevolence that He sent prophets and messengers to every nation, in order to guide people to the straight path.
All prophets have been human beings who received divine revelations in order to be role models, teachers, and advisers to their people. Each prophet had different strengths and was born in a different time, place, and culture. However, the prophets' message has always been the same: calling people to worship the One Supreme God and to obey His commandments.


1.ரஸூல்மார்கள்,நபிமார்கள் யாவரும் பாவங்களை விட்டும் பாதுகாக்கப் பட்டவர்கள்.
2.அல்லாஹ்வின் கட்டளைகளை அறிவிக்கிறவர்கள்.
3.அல்லாஹ்வின் தூதின்(message) படி நடக்கிரவர்கள்.
4.உண்மையையே பேசுகிறவர்கள்.
5.இறுதிநாளின் பயங்கரத்தை விட்டும் அச்சம் தீர்ந்தவர்கள்.
6.உண்மையான மார்க்கத்தைக் கொண்டு அனுப்ப்ப் பட்டவர்கள்.
7.அவர்களில் முதலானவர் ஆதம்(அலை) அவர்கள்; இறுதியானவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
8. நபி(ஸல்) அவர்கள்தான் நபிமார்களுக் கெல்லாம் மிகவும் மேன்மையானவர்கள்
என்று அறிந்து ஈமான் கொண்டேன். 

Thursday, November 10, 2011

quiz






 http://www.canadian-muslim.ca/CMO/Articles/Entries/2011/5/29_Islamic_Quiz-100_Questions_and_their_Answers.html
http://www.inter-islam.org/faith/Part1a.html#Imaan
http://1ststepsinislam.com/en/belief-in-last-day.aspx
http://girlsguidetobeingmuslim.blogspot.com/2009/02/how-to-make-wudu-things-to-do-before.html
http://arabic.speak7.com/prayer.htm
http://islam1.org/how_to_pray/wudu.htm


Wednesday, November 9, 2011

அன்றாடம் ஓதும் துஆக்கள்




1. தூங்கும் போது ஓதும் துஆ:  

                  اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

 الْحَمْدُ لِلَّهِ  الَّذِي  أَحْيَانَا  بَعْدَ  مَا  أَمَاتَنَا  وَإِلَيْهِ  النُّشُورُ

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

பொருள் : இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

                    غُفْرَانَكَ 
5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

          بِسْمِ  اللَّهِ  رَبِّ  أَعُوذُ  بِكَ  مِنْ  أَنْ  أَزِلَّ  أَوْ  أَضِلَّ  أَوْ  أَظْلِمَ  أَوْ

 أُظْلَمَ  أَوْ أَجْهَلَ  أَوْ  يُجْهَلَ عَلَيَّ


அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
6. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

     اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 1165

10. பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165

7. தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

           بِسْمِ اللَّه

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
8. உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:
        أَشْهَدُ أَنْ لإِإ لَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا

عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


11. சாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ


:
بِسْمِ اللَّهِ 

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378
12. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:


 
      بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ


பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781
13. சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:


        
 الْحَمْدُ لِلَّهِ
                                                                                                              
பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915

14. உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

      اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
.
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805
15. பயணத்தின் போது ஓதும் துஆ:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
   اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ
 مَا
 تَرْضَى

 اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ
 اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ
 السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
16. பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
17. தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

     الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

     يَرْحَمُكَ اللَّهُ

எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்

   يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
ஆதாரம்: புகாரி 6224