F "DEEN WE NEED" --- வகுப்பில்: 2012

Sunday, April 22, 2012

திருநபியின் திருசரிதை


பாகம்--3

41அப்போது அவர்களுக்கெதிராக எதிர்ப்பு, யுத்தம் ஏதும் ஏற்பட்டதா?
இல்லை.இஸ்லாமிய படை மாக்கா நகருக்குள் நுழையும்போது ஒரு துளி இரத்தமும் சிந்த்தக்கூடாது என்று தம் தோழர்களுக்கு (ஸல்)அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
42.நபி(ஸல்) அவர்கள் எப்பொழுது இவ்வுலகத்தை விட்டும் மறைந்தார்கள்?
ஹிஜ்ரி 10ம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் பிறை 12ல். (கி.பி 632ல் )
43.அப்பொழுது அவர்களின் வயதென்ன?
அப்போது அவர்களின் வயது 63.
44.நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்று உறுதிப் படுத்தியவர் யார்?
வரக்கா பின் நவ்ஃபல் அவர்கள்
45.வரக்கா பின் நவ்ஃபல் என்பவர் யார்?
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தந்தையின் உடன் பிறந்தவரின் மகன் .
அக்காலத்தில் இவர் இஞ்சீலை இப்ரானி மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த கிறிஸ்தவ பாதிரியார்.

நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன?
 கதீஜா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் தமது எத்தனையாவது வயதில் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்தார்கள்? அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது என்ன?
நபி (ஸல்) அவர்களின் வயது 25, கதீஜா (ரலி) அவர்களின் வயது 40

நபி (ஸல்) அவர்களுடன் கதீஜா (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
 25 ஆண்டுகள்
நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களின் எத்தனை? அவர்களின் பெயர்களைக் கூறு
46. கதீஜா 2. சவ்தா  3. ஆயிஷா 4. ஹப்ஸா 5. ஜைனப் பின்த் குஜைமா (ரழி)6. உம்மு சலமா 7. ஜைனப் பின்த் ஜஹ்ஷ் 8. ஜூவைரியா 9. உம்மு ஹபீபா 10. ஷபியா 11. மைமூனா பின்த்
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்போது உயிரோடு இருந்த மனைவிமார்கள் எத்தனை? அவர்களின் பெயர்களைக் கூறு
9 பேர்
இவர்களில் கதீஜா, ஸைனப் பின்த் குஸைமா (ரலி) ஆகிய இருவரும் நபி (ஸல்) வாழும்போதே மரணமானார்கள்.
47.நபி(ஸல்) அவர்களின் குழந்தைகள்
நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை குழந்தைகள்?
ஆண் குழந்தை :3,பெண் குழந்தை:4
ஆண் குழந்தையின் பெயர் என்ன?
 காஸிம், அப்துல்லாஹ், இப்றாஹீம்
48.நபி (ஸல்) அவர்களின் பெண் குழந்தைகள் பெயர்கள் என்ன?
 ஜைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்மு குல்ஸþம் (ரலி), ஃபாத்திமா (ரலி)
நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகளில் இப்றாஹீமைத் தவிர அனைவரும் அன்னை கதீஜாவுக்குப் பிறந்தவர்களே!
ஆண் மக்கள் அனைவரும் சிறு வயதிலேயே மரணமடைந்தனர்.
ஃபாத்திமாவைத் தவிர்த்து மற்ற மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர்.



Saturday, April 21, 2012

திருநபியின் திருசரிதை-2


பாகம்--2

21.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு குறைஷி மக்களால் வழங்கப்பட்ட பெயர்கள் யாவைஏன்?

உண்மையாளர்(அஸ் ஸாதிக்)நம்பிக்கையாளர் (அல்-அமீன்) என்று அழைக்கப்பட்டார்கள். காரணம் இவ்விரண்டு குணங்களின் அடிப்படையிலேயே வளர்ந்து வந்தார்கள்.

22.கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்ன உதவியை செய்தார்கள்?
 கஅபத்துல்லாஹ் கட்டுவதற்குரிய கற்களை எடுத்துச் செல்லும் வேலை செய்தார்கள்.

23.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது?

40 ஆம் வயதில்.

24.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த இடத்தில் முதன்முதலாக வஹீ இறங்கியது?

ஹிரா என்னும் குகையில்

25.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹியை கொண்டு வந்த வானவர் பெயர் என்ன?

ஜிப்ரயீல் (அலை)

26.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறங்கிய வஹி எது?

அல்-குர்ஆனின் 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள். (96:1-5)
27.முதன் முதலில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் எனவும் ஏற்றுக்கொண்டவர் யார்?

பெண்களில்: அன்னை கதீஜா (ரலி)
ஆண்களில்: ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி)
இளைஞர்களில்: ஹஜ்ரத் அலி(ரலி)
அடிமைகளில்: ஹஜ்ரத் பிலால் (ரலி)
அடிமைகளிலிருந்து விடுதலையடைந்தவர்கலில்: ஹஜ்ரத் ஜெய்துப்னு ஹாரிதா(ரலி)

28.இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக தாயிப் நகர் சென்ற நபி (ஸல்) அவர்களை அந்த நகரின் மக்கள் எவ்வாறு நடத்தினார்கள்?

நபி (ஸல்) அவர்களை மிகவும் மோசமாக நடத்தினார்கள்.
 நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக சிறுவர்களைத் தூண்டிவிட்டனர்.

அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களைக் கல்லால் எறிந்து அவர்களின் இரு கணுக்கால்களில் இரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்தினார்கள்.

29.மக்காவாசிகள் (ஸல்) அவர்களையும்,அவர் தோழர்களையும் தீங்கிழைக்க காரணம் என்ன?

அக்காலத்தில் அரபிகள் கொண்டிருந்த மூடக்கொள்கைகளை,தீய செயல்களை,சிலை வணக்கங்களை இல்லாமல் ஆக்கினார்கள்.

ஓரிறைக் கொள்கை,சமத்துவம்,சகோதரத்துவம் சுதந்திரம் போனற நற்குணங்களை ஏவினார்கள்.
இதற்காகவே அம்மக்கள் அவர்களையும்,அவர் தோழர்களையும் தீங்கிழைக்க ஆரம்பித்தார்கள்.

30.நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

      ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள்

31.நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

      ஏறத்தாழ பத்து ஆண்டுகள்.

32.ஹிஜ்ரத் என்றால் என்ன?
வாழும் நாட்டில் தீயவர்களின் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.
33.இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?

ஹபஸா (அபிசீனியா)

34.நபி(ஸல்) அவர்களும் அவர் தோழர்களும் ஏன் மதீனாவிற்கு சென்றார்கள்?

மக்கா காஃபிர்களின் கொடுமைகள் தாங்கமுடியாததால் புகலிடம் தேடி மதீனா நகர் சென்றார்கள்.

36.நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியில் எந்த குகையில் தங்கினார்கள்?

ஃதவ்ர் என்னும் குகையில்

37.எப்போது ஹிஜ்ரத் சென்றார்கள்? அப்போது அவர்களின் வயது என்ன?

நபிப்பட்டம் கிடைத்து 13ம் வருட்த்தில் .அப்போது அவர்களின் வயது 53 ஆகும்.

38.ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகரை விட்டுமதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து
.
39.மதீனாவாசிகள் நபி(ஸல்) அவர்களை எவ்வாறு வரவேற்றார்கள்?

அன்புடன் வரவேற்று அவ்ர்களின் உயரிய உபதேசங்களைக் கேட்டு இஸ்லாமில் இனைந்துக் கொண்டார்கள்.

40. நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவிற்கு  எப்பொழுது திரும்பிச் சென்றார்கள்?

ஹிஜ்ரி 8ம் ஆண்டு அல்லாஹு அக்பர் என்ற தக்பீருடன் பைத்துல்லாஹ்வை அடைந்து வலம்(தவாஃப்)
வந்தார்கள்.

Friday, April 20, 2012

திருநபியின் திருசரிதை-1

   பாகம் --1
                                  
1.உனது நபி யார்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

2.நபி (ஸல்) அவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்தவர்கள்?
அரேபியிர்களின் உயர்ந்த குலமான குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதம் (அலை) அவர்களின் 51வது தலமுறையைச் சேர்ந்தவர்கள்.

3.அவர்கள் எங்கு பிறந்தார்கள்?
மாக்கா நகரில்

4.அவர்களின் புனித உடல் எங்கு அடக்கப் பெற்றது?
மதீனா நகரில்

5.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?
ஆமினா அம்மையார்

6.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையார் பெயர் என்ன?
அப்துல்லாஹ்

7.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?
அப்துல் முத்தலிப்B

8.நபி(ஸல்) அவர்களின் முப்பாட்டானார் பெயர் என்ன?
ஹாஷிம்

9.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்?
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

10.முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்?
கி.பி. 570 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் பிறந்தார்கள். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12-ல் பிறந்தார்கள்.

11.முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் எப்படி அழைக்கப்படுகிறது?
யானை ஆண்டு என அழைக்கப்படுகிறது.

12.நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது மரணமடைந்தார்கள்?
தாயின் வயிற்றில்  இருக்கும் போது

13..முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எப்போது மரணமடைந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது

14.முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் மரணத்திற்குப் பின்னர் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?
தமது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

15முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் எப்போது மரணமடைந்தார்கள்?
நபி (ஸல்) அவர்களுக்கு எட்டு வயதாக இருக்கும் போது.

16.அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு முஹம்மது (ஸல்) அவர்கள் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?
17.நபி (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் அபுதாலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

18.முஹம்மது (ஸல்) அவர்கள் குழந்தையாக இருந்த போது அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய் யார்?
ஹலீமத்துஸ் ஸஃதிய்யா என்ற அம்மையார்.

19.நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?
 ஆடு மேய்த்தல்

20.சிறுவயதிலிருந்தே நபி(ஸல்) அவர்களிடமிருந்த குணங்கள் யாவை?
  உயர் சிந்தனைபேச்சில் உண்மைநம்பகத்தன்மை> பொறுமை>நேர்மை>வாக்குறுதி > ஒழுக்கம்>மரியாதை>,இரக்கம்,போன்ற இம்மை மறுமையில் நற்பயன் விளைவிக்க்க் கூடிய நற்குணங்கள் அனைத்துமாகும்.

Wednesday, March 14, 2012

ஹஜ்


ஹஜ் பற்றி சிறு விளக்கம்

1.ஹஜ் என்றால் என்ன?

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் ஆகும்.
 ஹஜ் என்ற அரபுச் சொல்லிற்கு (புனிதமான ஒன்றை) நாடிச் செல்லல் என்பது பொருளாகும்.
செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ள ஒரு முஸ்லிம் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்கா நகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ் எனப்படும்.

2.ஹஜ் யார் மீது கடமையாகும்?

பிரயாணம் செய்வதற்கான உடல் ஆரோக்கியமும் ,பொருளாதார வசதியும் உள்ள ,பருவ வயதை அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஹஜ் செய்வது கடமையாகும்.

3.ஹஜ்ஜின் சிறப்பைப் பற்றி ஒரு சில நபி மொழிகள் கூறு

1 நாம் செய்யும் செயல்களில் சிறந்தது எது?' என்று நபியிடம் ஒருவர் வந்து கேட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்று பதிலுரைத்தார்கள்.

'அதன்பின் எது?' என கேட்கப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள்.

'அதன்பின் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, ' ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்' என்றார்கள்'

2.ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கம் தான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

3.ஒரு பெண்மணி நபியிடம் வந்து எனது தாய் ஹஜ் செய்யாமல் மரணமடைந்து விட்டார்என்று கூறினார்.

அதற்கு நபியவர்கள். உன் தாய்க்காக நீ ஹஜ் செய்துக் கொள்என பதில் கூறினார்கள்

4.எல்லா வசதிகளும் இருந்து ஹஜ் செய்யாதவனின் நிலை என்ன?
எல்லாவிதமான வசதி, வாய்ப்புக்களும் இருந்தும் ஹஜ் செய்யாமல் இருப்பவர்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும்போது, “ வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர் யஹுதியாகவோ,(Jew) நஸாராவாகவோ(Christian) மரணிக்கட்டும் என்று சபித்துக் கூறியுள்ளார்கள்.(நவூதுபில்லாஹ்—அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!)

அல்லாஹ் நம்மனைவ்ருக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவானாக்! ஆமீன்.

ஜகாத்


ஸகாத் பற்றி சிறு விளக்கம்

ஸகாத் என்றால் என்ன?

இதன் பொருள் தூய்மையாக்குதல் என்பதாகும்.
ஒருவன் தனது அனைத்து பொருள்களிலிருந்தும் நாற்பதில் ஒரு பகுதியை எடுத்து ஏழைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவனிடம் உள்ள மற்ற பொருளும் தூய்மை பெறுகிறது.
மேலும் அவனுடைய உள்ளமும் கஞ்சத்தனத்திலிருந்து தூய்மை பெறுகிறது
.
ஸகாத்தின் நோக்கம் என்ன ?

பணம் உடையவர்களிடம் மட்டுமே பணம் இருக்க்க் கூடாது.அது எல்லா மக்களையும் சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும்.

ஸகாத் கடமையான பொருட்கள்:

ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது:

1) தங்கம்
யாரிடமேனும் தமது அத்தியாவசியப் பொருட்களான உணவு,உடை, உறையுள்,தொழிற் கருவிகள்போக 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால் அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஸகாத் கொடுத்தாக வேண்டும்.

குறிப்பு:
சேமிப்புடைய நோக்கம் மட்டும் இருக்குமானால் கண்டிப்பாக கொடுக்கவேண்டும்.

2)வெள்ளி

3)வியாபாரப் பொருட்கள் 

4) கால் நடைகள் ஆடு,மாடு, ஒட்டகம்.
                                                                                                  5) விவசாய பொருட்கள்.—grains
தானியங்களைப் பொறுத்தவரை. விவசாயம் செய்து விளைந்து அறுவடை செய்யும் காலங்களில் அதற்குரிய  ஸகாத்தை கணக்கி;ட்டுக் கொடுக்க வேண்டும்

வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு கட்டாயம் ஸகாத் வழங்கியே ஆக வேண்டும்.
.

Saturday, March 10, 2012

ஐங்காலத் தொழுகையின் நேரங்கள்:


ஃபஜ்ர் : அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரைக்குமாகும்.
லுஹர் : சூரியன் அதன் உச்சியிலிருந்து மேற்கு நோக்கி சாய்ந்த்திலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரையாகும்.
அஸர் : ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவை அடைந்தவுடன் ஆரம்பமாகி சூரியன் மறையும் வரை நீடிக்கின்றது.
மஃரிப் : சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரைக்குமாகும். செம்மேகம் என்பது சூரியன் மறைந்த பிறகு தோன்றுவதாகும்.
இஷா : செம்மேகம் மறைந்ததிலிருந்து இரவின் பகுதி வரைக்குமாகும்.
அஸர் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் ஒரு பொருளின் நிழல் அது போன்று இரண்டு மடங்காகும் வரையாகும். அதற்குரிய நிர்பந்தத்திற்குரிய நேரம் சூரியன் மறையும் வரையுமாகும். இஷாத் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் இரவின் மூன்றில் முதல் பகுதி வரையுமாகும். அதற்குரிய நிர்பந்த நேரம் சுப்ஹு வரையுமாகும்.
1. Fajr :  (Dawn-Prayer
Fajr begins at - true dawn or morning twilight  when the morning light appears across the full width of the sky.

 2. Dhuhr (Zhur - Mid-Day Prayer): when sun reaches its highest point and begins to decline.
Dhuhr ends when ‘Asr salaat begins(When the shadow of an object becomes its length)

3.Asr: When the shadow of an object becomes its length
  ‘Asr ends as the sun begins to set,

4.Maghrib :begins when sun completely set
  Maghrib lasts until 'Isha (till fading of twilight or complete darkness). 

5.‘Isha (Night-Prayer): when Shafaq (twilight) is set in.

ஸஜ்தா செய்வதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள்: 

1) ஃப்ஜ்ருடைய ஃப்ர்ளு தொழுதபின் சூரிய உதயம் வரை.
2) சூரியன் அடிவானில் உதயமாவதில் இருந்து அது முழுமையாக உதயமாகும் வரை உள்ள நேரங்கள்.
3) சூரியன் நடு உச்சியில் இருக்கும் போது.
4) சூரியன் அடிவானில் மறைய ஆரம்பமாவதில் இருந்து அது முழுமையாக மறையும் வரை உள்ள நேரம்
5) அஸ்ருடைய ஃப்ர்ளு தொழுத பின் சூரியன் மறையும் வரை

Thursday, March 8, 2012

ஜும்ஆ தொழுகை

1.ஜும்ஆ தொழுகை:
நேரம்:  வெள்ளிக் கிழமை லுஹர் நேரத்தில் இமாமுடன் சேர்ந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழவேண்டும்.
முன் ஸுன்னத்துக்கள்,பின் ஸுன்னத்துக்கள் நான்கு ரக்அத்துக்கள் ஆகும்.
பருவ வயதை அடைந்தவர்கள் நாற்பது பேர் க்லந்து கொள்ள வேண்டும்.
இத்தொழுகையில் இமாம் இரண்டு குத்பாக்கள்(speech)ஓதுவார்.
அதில் 1,அல்லாஹ்வை புகழ்வ்து
2.நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுவது
3.தக்வாவை(இறை அச்சம்)க் கொண்டு உபதேசிப்பது
4.குர்ஆன வ்சனத்திலிருந்து ஓதி விளக்கம் அளித்தல்
5.இரண்டாம் குத்பாவில் முஃமின்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிப் பிரார்த்தித்தல்.
இவையனைத்தும் ஜுமஆவின் ஃப்ர்ளுகள் ஆகும்.
இமாம் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிலிருந்து எழும்பிய பிறகு ஒருவன் சேர்ந்தால்?
ஜும்ஆவுடைய நிய்யத்தில் இமாமை பின்தொடர்ந்து நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும்.
இமாம் ஸலாம் கொடுத்தபின் ஒருவன் வ்ந்தால் ?
ளுஹருடைய நிய்யத் வைத்து நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும்
ஜும்ஆ தொழுகையின் சிறப்புக்கள்
ஒப்புக் கொள்ளப்படும் ஒரு துஆ நேரம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 935)
"ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 342, திர்மிதி 198)
"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 881)
இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?
இதயங்கள் இறுகி விடும்
"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 460)

Wednesday, March 7, 2012

ஸுன்னத்தான தொழுகைகள்


சில முக்கியமான ஸுன்னத்தான தொழுகைகள்

 1.தஹிய்யத்துல் மஸ்ஜித்:காணிக்கைத் தொழுகை(tribute prayer)

நேரம்:  ஒருவன் பள்ளியில் நுழைந்தவுடன் உட்காருவதற்குமுன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது.
ஃப்ர்ளு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது சென்றால் இத்தொழுகை தொழ்வேண்டியதில்லை.

2.தஹஜ்ஜத்து தொழுகை:

நேரம்:  இரவில் தூங்கி விழித்து தொழும் தொழுகை.
எண்ணிக்கை:குறைந்த்து இரண்டு ரக்அத்துக்களாகும்.விரும்பினால் அதிகம் தொழுலாம்.அதிக நன்மை கிடைக்கும்.
நபி(ஸ்ல்) அவர்களுக்கு இத்தொழுகை கடமையாக்கப் பட்டுர்ய்ந்த்து.
இந்நன்மையை அல்லாஹ்வையன்றி யாரும் அறியமாட்டார்கள்.

3.வித்ரு தொழுகை:

நேரம்:இஷாவிற்குப் பின் ஸுப்ஹுக்கு முன் வரை வித்ருக்குள்ள  நேரமாகும்.
எண்ணிக்கை:
2---11 ரக்அத்துக்கள். ஒற்றை எண்ணிக்கையில் முடிக்க்க் கூடிய தொழுகையாகும்.

4.ளுஹாத் தொழுகை:

இது பகல் நேரத் தொழுகையாகும்.(9am –12pm)
நேரம்:சூரியன் மேல் உயர்ந்த்திலிருந்து உச்சி வானம் வரும்வரையுள்ள நேரமாகும்
எண்ணிக்கை:    2--8 ரக்அத்துக்கள் ஆகும்.
இரண்டிரண்டாக தொழவேண்டும்.

5.தராவீஹுத் தொழுகை
:
நேரம்: ரமழான் மாத்த்தில்  இஷாவிற்குப் பின் சுப்ஹு(வைகறை) வரையில் தொழுவது.
எண்ணிக்கை:இரண்டிரண்டாக தொழவேண்டும்.அத்ன் எண்ணிக்கை இருபது ரக்அத்துக்களாகும்.(உலக அள்வில் அறிஞர்களிக்கிடையே கருத்து வேற்றுமையுள்ளது. 4 அல்லது 10 ரக்த்துக்களாக )அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஜமாஅத்தாக தொழுவது ,ஹாஃபிழ்களை பின் தொடர்ந்து தொழுவது
மிகச் சிறந்த்தாகும்.

6.மழை வேண்டித் தொழுகை

7.சூரிய,சந்திர தொழுகை

8.இஸ்திகாராத் தொழுகை:

இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!

மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.
ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்! சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான்  சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்இஸ்திகாரா தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

Friday, February 24, 2012

நோன்பு


நோன்பு பற்றி சிறு விள்க்கம்

நோன்பு வைக்க கடமைப்பட்டோர் யார்?
ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

ரமழான் நோன்பு யார் மீது கடமையில்லை?
சக்தியற்றவயோதிகர்,பாலர்,பைத்தியக்காரர்,பிரயாணி,நோயாளி ஆகியோர்
.
மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்
.
மிகுந்த வயதானவர், குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோயாளி, இதுபோன்ற இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

நோன்பு காலத்தில் இறைவன் வழங்கிய சலுகைகள்.
1. மாதவிடாய் ஏற்பட்டவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
2. நோயாளி : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
3. பிரயாணத்தில் உள்ளவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. வயது முதிந்தவர்கள் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்
5. கர்ப்பிணிப் பெண்,பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டும்.

நோன்பை முறிக்க்க்கூடியவை & நோன்பை முறிக்காதவை :
1.        உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.
2.        உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது.
3.        மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.
4.        இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது.
5.        வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.
6.        ஒளு செய்யும்போது வாய் அதிகமாக கொப்பளித்து,அதனால் தண்ணீர் உட்செல்லுதல்.
7.        காரல்,சளி முதலியவை தொண்டயைவிட்டு நீங்கிவந்தபின் மறுபடியும் விழுங்குதல்,வாயிலிருக்கும் இரத்தம் சுத்தம் செய்யப்படுமுன் உமிழ்நீரை விழுங்குதல்.
8.        நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.
9.        உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.
10.     பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.
11.     நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது.
12.     நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

 நோன்பின் ஸுன்னத்துக்களில் சில:    

  1. ஸஹர் செய்தல்,சூரியன் மறைந்தவுடன் தாமதமின்றி நோன்பு
  2.     திறப்பது
  3. பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும கிடைக்காவிட்டால் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத திறப்பது
  4. நோன்பு திறந்தவுடன் துஆ ஓதுவது
  5. அதிகம் (தர்மங்கள்) ஸதக்கா செய்வது.
  6. குடும்பம்,சொந்தக்காரங்கள்,ஏழைகள்,அநாதைகள் ஆகியோருக்கு உதவுவது
  7. மற்ற நோன்பாளிகளை அன்புடன் வரவேற்று நோன்புதிறக்கச் செய்வது 
  8. ல்லாஹ்வை நினைத்தல்,திருக்குர்ஆன்ஓதுதல்,ஸலவாத்து ஓதுதல் போன்றவை அதிகம் செய்வது.

நோன்புவைக்க கூடாத நாட்கள்:ஹராமான நாட்கள்:

  •  இரு பெருநாட்கள்
  • துல்ஹஜ்ஜு மாதத்தின் பிறை 11,12,13 ஆகிய ஐந்து நாட்களாகும்.  நோன்பா?இல்லையா?என சந்தேகத்திக்கும் நாட்கள்


ஸுன்னத்தான நோன்புகளில் சில: அரஃபா நோன்பு
  1. ஆஷூரா நோன்பு
  2.  ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு
  3. வாரத்தில் திங்கள்,வியாழன் கிழமைகள்

ரமழான் மாத்த்தின் சிறப்புக்கள்:

  1.  புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டது.
  2. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது.

நோன்பின் ஒழுக்கங்கள்:

  1. நோன்பாளி ஆபாசக் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.
  2. புறம், கோள், பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.
  3.  வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.
  4. மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்..
  5. சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பின் நிய்யத்து:
ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பதாக அம்மாதத்தில் ஒவ்வோர் நாள் ஸுப்ஹுக்குமுன் நிய்யத்து வைப்பதுடன் ஃப்ர்ளான அல்லது ஸுன்னத்தான அல்லது களாவான நோன்பு என விவரித்து நிய்யத் வைக்கவேண்டும்.