F "DEEN WE NEED" --- வகுப்பில்: February 2012

Friday, February 24, 2012

நோன்பு


நோன்பு பற்றி சிறு விள்க்கம்

நோன்பு வைக்க கடமைப்பட்டோர் யார்?
ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

ரமழான் நோன்பு யார் மீது கடமையில்லை?
சக்தியற்றவயோதிகர்,பாலர்,பைத்தியக்காரர்,பிரயாணி,நோயாளி ஆகியோர்
.
மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்
.
மிகுந்த வயதானவர், குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோயாளி, இதுபோன்ற இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

நோன்பு காலத்தில் இறைவன் வழங்கிய சலுகைகள்.
1. மாதவிடாய் ஏற்பட்டவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
2. நோயாளி : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
3. பிரயாணத்தில் உள்ளவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. வயது முதிந்தவர்கள் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்
5. கர்ப்பிணிப் பெண்,பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டும்.

நோன்பை முறிக்க்க்கூடியவை & நோன்பை முறிக்காதவை :
1.        உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.
2.        உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது.
3.        மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.
4.        இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது.
5.        வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.
6.        ஒளு செய்யும்போது வாய் அதிகமாக கொப்பளித்து,அதனால் தண்ணீர் உட்செல்லுதல்.
7.        காரல்,சளி முதலியவை தொண்டயைவிட்டு நீங்கிவந்தபின் மறுபடியும் விழுங்குதல்,வாயிலிருக்கும் இரத்தம் சுத்தம் செய்யப்படுமுன் உமிழ்நீரை விழுங்குதல்.
8.        நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.
9.        உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.
10.     பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.
11.     நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது.
12.     நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

 நோன்பின் ஸுன்னத்துக்களில் சில:    

  1. ஸஹர் செய்தல்,சூரியன் மறைந்தவுடன் தாமதமின்றி நோன்பு
  2.     திறப்பது
  3. பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும கிடைக்காவிட்டால் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத திறப்பது
  4. நோன்பு திறந்தவுடன் துஆ ஓதுவது
  5. அதிகம் (தர்மங்கள்) ஸதக்கா செய்வது.
  6. குடும்பம்,சொந்தக்காரங்கள்,ஏழைகள்,அநாதைகள் ஆகியோருக்கு உதவுவது
  7. மற்ற நோன்பாளிகளை அன்புடன் வரவேற்று நோன்புதிறக்கச் செய்வது 
  8. ல்லாஹ்வை நினைத்தல்,திருக்குர்ஆன்ஓதுதல்,ஸலவாத்து ஓதுதல் போன்றவை அதிகம் செய்வது.

நோன்புவைக்க கூடாத நாட்கள்:ஹராமான நாட்கள்:

  •  இரு பெருநாட்கள்
  • துல்ஹஜ்ஜு மாதத்தின் பிறை 11,12,13 ஆகிய ஐந்து நாட்களாகும்.  நோன்பா?இல்லையா?என சந்தேகத்திக்கும் நாட்கள்


ஸுன்னத்தான நோன்புகளில் சில: அரஃபா நோன்பு
  1. ஆஷூரா நோன்பு
  2.  ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு
  3. வாரத்தில் திங்கள்,வியாழன் கிழமைகள்

ரமழான் மாத்த்தின் சிறப்புக்கள்:

  1.  புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டது.
  2. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது.

நோன்பின் ஒழுக்கங்கள்:

  1. நோன்பாளி ஆபாசக் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.
  2. புறம், கோள், பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.
  3.  வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.
  4. மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்..
  5. சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பின் நிய்யத்து:
ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பதாக அம்மாதத்தில் ஒவ்வோர் நாள் ஸுப்ஹுக்குமுன் நிய்யத்து வைப்பதுடன் ஃப்ர்ளான அல்லது ஸுன்னத்தான அல்லது களாவான நோன்பு என விவரித்து நிய்யத் வைக்கவேண்டும்.

நோன்பு

நோன்பு பற்றி சிறு விள்க்கம்.

யார் மீது நோன்பு கடமை? யாருக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது?

1) பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம்.

2) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தரிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.

3) முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

4) சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.


5) பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

6) கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் தாய்,நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

7) மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்

3.சலுகையளிக்கப்பட்டவர்கள்
1. நோயாளி :                                     
2.பிரயாணத்தில் உள்ளவர்கள்
3 மாதவிடாய்,மற்றும் பிரசவத் தீட்டுள்ள பெண்கள்.
                     :   இம்மூவரும்  நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. வயது முதிந்தவர்கள் : ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

4.தடைசெய்யப்பட்டவர்கள்.
மாதவிடாய்,மற்றும் பிரசவத் தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும்.

5.நோன்பை முறிக்கும் செயல்கள்
1.        சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல்
2.        உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை(மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
3.        மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.
4.        .இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்
5.        .வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.
6.        ஒளு செய்யும்போது வாய் அதிகமாக கொப்பளித்து,அதனால் தண்ணீர் உட்செல்லுதல்.
7.        வாய்க் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கி விட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
8.        . காரல்,சளி முதலியவை தொண்டயைவிட்டு நீங்கிவந்தபின் மறுபடியும் விழுங்குதல்.

 6. நோன்பை முறிக்காதவை -- :அனுமதிகள்
1.        நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.
2.        வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது
3.        நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண் காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது
4.        .சிறு மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.
5.        நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது.
6.        நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.
7.        குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வது தவறில்லை. சுப்ஹு தொழுகைக்காக, குளித்துக் கொண்டாலே போதுமானது.
8.        நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண் காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது.

7.நோன்பின் ஸுன்னத்துக்களில் சில:   
1.        ஸஹர் செய்தல்,
2.        சூரியன் மறைந்தவுடன் தாமதமின்றி நோன்பு திறப்பது
3.        பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும கிடைக்காவிட்டால் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத திறப்பது
4.        நோன்பு திறந்தவுடன் துஆ ஓதுவது
5.        அதிகம் (தர்மங்கள்) ஸதக்கா செய்வது.
6.        குடும்பம்,சொந்தக்காரங்கள்,ஏழைகள்,அநாதைகள் ஆகியோருக்கு உதவுவது
7.        மற்ற நோன்பாளிகளை அன்புடன் வரவேற்று நோன்புதிறக்கச் செய்வது
8.        அல்லாஹ்வை நினைத்தல்,திருக்குர்ஆன்ஓதுதல்,ஸலவாத்து ஓதுதல் போன்றவை அதிகம் செய்வது.

8.நோன்புவைக்க கூடாத நாட்கள்:ஹராமான நாட்கள்:
1.        இரு பெருநாட்கள்
2.        துல்ஹஜ்ஜு மாதத்தின் பிறை 11,12,13 ஆகிய ஐந்து நாட்களாகும்.
3.        நோன்பா?இல்லையா?என சந்தேகத்திக்கும் நாட்கள்

9.ஸுன்னத்தான நோன்புகளில் சில:
1.        அரஃபா நோன்பு –துல் ஹஜ் பிறை 9
2.        ஆஷூரா நோன்பு –முஹர்ரம் பிறை 9 & 10
3.        ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு
4.        வாரத்தில் திங்கள்,வியாழன் கிழமைகள்
5.        ஒவ்வொரு மாதமும் 13,14,15,(முழு நிலா)

10.ரமழான் மாத்த்தின் சிறப்புக்கள்:
1. புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டது.
2.ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது.

11.நோன்பின் ஒழுக்கங்கள்:
1. கண்:நோன்பாளி ஆபாசக் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.
2.நாவு: புறம், கோள், பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.
3. காது: வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.
4.மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்..
5.சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

12.நோன்பின் நிய்யத்து:
ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பதாக அம்மாதத்தில் ஒவ்வோர் நாள் ஸுப்ஹுக்குமுன் நிய்யத்து வைப்பதுடன் ஃப்ர்ளான அல்லது ஸுன்னத்தான அல்லது களாவான நோன்பு என விவரித்து நிய்யத் வைக்கவேண்டும்.

13.‘முத்துஎன்றால் என்ன?அதன் விளக்கம்?
நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு கொடுக்கப்படும் உணவுக்கு முத்துஎனப்படும்.
இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு முத்து (750 கிராம்) ஆகும்.
கழாவான நோன்பை நோற்காது விட்டுவிட்டு, ரமழான் மாதத்திற்குப் பிறகு  அடுத்த ரமழான் வரும் வரைக்கும் வேண்டுமென்று அதன் கழாவை நிறைவேற்றாது விட்டால், கழாவானதை செய்வதுடன் ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு முத்து (750 கிராம்) உணவு ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

Monday, February 20, 2012

ஹைலுடைய பாடம்(மாதவிடாய்)



          குறிப்பிட்ட காலங்களில் பெண்களின் கருப்பையின் ஓரப்பகுதியிலிருந்து வெளிவரும் இயற்கை உதிரப்போக்கு (Hailu) மாதவிடாய் என்று சொல்லப்படும்.இது ஒவ்வொரு உயிரின்ங்களுக்கும் ஏற்படுவதுண்டு.இமாம்களின் ஆய்வுப்படி ஒன்பது வயதில் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்படலாம்.உடல்,நாடு,காலச்சூல்நிலைக்கேற்ப இதைவிடத் தாமதமாகவும் ஏற்படலாம்.ஒன்பது வயதில் தொடங்கும் மாதவிடாய் 55--60 வயதை அடையும்பொழுது நின்றுவிடும்.

1.மாதவிடாய் ஏற்படும் காலஅளவு என்ன?
குறைந்தபட்ச அளவு 24மணி நேரங்கள்;.
அதிகபட்ச அளவு 15 நாட்கள்.
15 நாட்களுக்குள் ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்து அதன் காலம் மாறுபடலாம்.6 or ஏழு நாட்கள் or அதற்கு மேலும்.

2. 24மணி நேரத்தை விட குறைவாகவோ 15 நாட்களை விட அதிகமாகவோ உதிரம்(இரத்தம்)இருந்தால்?
அவை ‘HAILU’ ஆக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.அது நோயின் காரணமாக ஏற்படலாம்
.
3.நோயின் காரணமாக ஏற்படும் நிலைமைக்கு என்ன பெயர்?
இஸ்திஹாலாஉதிரப்போக்கு  என்று பெயர்
.
4.இரண்டு ஹைலுக்கு இடைப்பட்ட அவசியமான சுத்தமான நாட்கள் எத்தனை?
 அவசியம் 15 நாட்கள் சுத்தமான நாட்களாக இருக்கவேண்டும்.
அதாவது உதிரப்போக்கு இல்லாதநிலையில் இருக்க வேண்டும்.

5.பதினைந்து நாட்களுக்குள் இரத்தப்போக்கு ஏற்பட்டால்?
அது ஹைலு -மாதவிடாய்- கிடையாது.அது உதிரப் பெரும்போக்கு எனப்படும்.

6.ஒருநாள் விட்டு ஒருநாள் or ஒருநேரம் விட்டு ஒருநேரம் வரும் இரத்தங்கள் எவ்வாறு கருதப்படும்?
இவையாவும் ஹைல்ஆகவே கருதப்படும்.
இருப்பினும் கவனத்தில் கொள்ளவேண்டியது :24மணி நேரத்தை விடக் குறையாமலும் 15நாட்களை விட அதிகமாகாமலும் இருத்தல் வேண்டும்.

7.பதினைந்து  நாட்களுக்கு மேல் ஏற்படும் இரத்தத்திற்கு(உதிரப் பெரும்போக்கு) என்ன பெயர்?
  இஸ்திஹாலா

8.இஸ்திஹாலா உடைய நாட்களில்  தொழுகை மற்ற அமல்கள் எப்படி செய்யவேண்டும்?
a.இந்நிலையில் பெண்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் தங்களின் மறைவிடங்களைக் கழுவி இரத்தம் வெளியேறாதவாறு அதற்குரிய பாதுகாப்போடு இருக்க வேண்டும்.

b.ஒவ்வொரு வக்திற்கும்(நேரத்திற்கும்) உளு செய்யவேண்டும்.அதாவது ஒரு உளுவைக் கொண்டு ஒரு ஃப்ர்ளு தொழுகைதான் தொழ முடியும்.ஸுன்னத்தான தொழுகை அதிகம் தொழலாம்.

c.ரமழான் மாதம் நோன்பு வைப்பது கடமயாகும்.

d.ஹைலு உடைய காலங்களில் செய்யக் கூடாதவை (ஹராமானவை) அனைத்தும் செய்யலாம் (ஹலாலாகும்).

f.பள்ளிவாசல் செல்வது அங்கு தங்குவது போன்றவை தவிர்ந்துக் கொள்ளுதல்.

Wednesday, February 8, 2012

1st Revision---தொழுகை


1.        உளுவின் ஃப்ர்ளு?ஸுன்னத்துக்கள்?
2.        உளு முறிக்கும் காரியங்கள்?
3.        மஹ்ரமான துணை?
4.        ஒளுவில்லாதவர் தவாஃபு செய்யலாமா?
5.        தவாஃப் என்றால் என்ன? எத்தனை முறை?இடையில் உளு முறிந்தால்?
6.        .தயம்முமின் உறுப்புக்கள்?
7.        கடமயான குளிப்பின் ஃப்ர்ளு?
8.        உளுவின் ஷர்த்துக்கள்? குளிப்பின் ஷர்த்துக்கள்?
9.        குளிப்பின் ஸுன்னத்துக்கள்?
10.     அருவியில் குளித்தால் உளுச்செய்வது எப்படி? 
11.     குளிப்பு கடமையானவர்கள் செய்யக் கூடாதவை?
12.     அஸ்ஸலாத்து ஹைருன் மின்ன் நவ்ம் எப்போது சொல்லப்படும்?அதன் பொருள் என்ன்?
13.     ஹய்யஅல்ல் ஃப்லாஹ் ஹய்யஅல்ல் ஸலாத்-திற்கு என்ன பதில்?
14.     பாங்கின் துஆ?
15.     பாங்கு துஆ ஓதுவதினால் என்ன நன்மை கிடைக்கும்?
16.     தொழுகையின் ஃப்ர்ளுகள்? 1
17.     தொழுகையின் ஷர்த்துக்கள்?
18.     சிறு தொடக்கு பெருந்தொடக்கு என்றால் என்ன?
19.     அத்தைஹிய்யத்து  & அதன் பிறகு ஓதும் துஆ?
20.     தொழுகையின் நிய்யத்தில் மிகவும் கவனிக்க வேண்டியவை எவை?
21.     நகப்பாலிஷ் இருந்தால் ஒளு கூடுமா? ஏன்?
22.     தொழுகையில் மயங்கி விழுந்தவனின் நிலை என்ன?
23.     உளுவின் உறுப்புக்கள் எத்தனை?
24.     உப்புத் தண்ணீரில் உளுச் செய்யலாமா?
25.     பல் துலக்கல் ஒளுவின் என்ன செயல்?
26.     தொழுகையின் ஆரம்ப தக்பீருக்கு என்ன பெயர்?
27.     தயம்மும் எவ்வாறு செய்ய வேண்டும்?செயல்முறை:
28.     ஒவ்வொரு தொழுகையிலும் ஓதவேண்டிய சூரா?
29.     தொழுகையின் அப்ஆளு ஸுன்னத்துக்கள்? ஒன்றை விட்டால் என்ன செய்ய வேண்டும்?
30.     ஸஜ்தாவின் உறுப்புக்கள்?
31.     ஸ்ஜ்தா ஸ்ஹ்வு எப்போது? எப்படி?என்ன ஓத வேண்டும்?
32.     இமாமுடன் சேர்ந்து தொழும்போது எப்படி இமாம் & ம்ஃமூம் நிய்யத்?
33.     தொழுகைக்கான நேரங்கள்?தொழ பொறுத்தமில்லாத நேரங்கள்?
34.     சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துக்கள்?
35.     அஸர் தொழுகையின் நேரம்?
36.     தொழுகையை முறிக்க்க்கூடியவை எவை?
37.     முதல் அத்தஹிய்யாத்தை விட்டால் தொழுகை நிறைவேறுமா?
38.     ஃப்ர்ளு,ஸுன்னத்து என்றால் என்ன?
39.     தொழுகையில் காரலை(spittal) விழுங்கலாமா?
40.     ஒளுவுடன் ஒரு தாய் குழந்தையின் அசுத்த்த்தை கழுவியபின் தொழலாமா?
41.     ம்ஃரிபுக்கு ஒரு நிமிடம் முன்பு தொழுதவனின் நிலை என்ன?
42.     ஹைலு நிஃபஸ் என்றால் என்ன?
43.     தொழ்கையில் மூன்றா?அல்லது நான்கு ரக்அத்களா என ச்ந்தேகம் வந்தால் ?