நோன்பு பற்றி சிறு விள்க்கம்
நோன்பு வைக்க கடமைப்பட்டோர் யார்?
ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.
ரமழான் நோன்பு யார் மீது கடமையில்லை?
சக்தியற்றவயோதிகர்,பாலர்,பைத்தியக்காரர்,பிரயாணி,நோயாளி ஆகியோர்
.
.
மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.
தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்
.
.
மிகுந்த வயதானவர், குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோயாளி, இதுபோன்ற இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.
நோன்பு காலத்தில் இறைவன் வழங்கிய சலுகைகள்.
1. மாதவிடாய் ஏற்பட்டவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
2. நோயாளி : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
3. பிரயாணத்தில் உள்ளவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. வயது முதிந்தவர்கள் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்
5. கர்ப்பிணிப் பெண்,பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டும்.
நோன்பை முறிக்க்க்கூடியவை & நோன்பை முறிக்காதவை :
1. உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.
2. உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது.
3. மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.
4. இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது.
5. வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.
6. ஒளு செய்யும்போது வாய் அதிகமாக கொப்பளித்து,அதனால் தண்ணீர் உட்செல்லுதல்.
7. காரல்,சளி முதலியவை தொண்டயைவிட்டு நீங்கிவந்தபின் மறுபடியும் விழுங்குதல்,வாயிலிருக்கும் இரத்தம் சுத்தம் செய்யப்படுமுன் உமிழ்நீரை விழுங்குதல்.
8. நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.
9. உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.
10. பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.
11. நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது.
12. நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.
நோன்பின் ஸுன்னத்துக்களில் சில:
- ஸஹர் செய்தல்,சூரியன் மறைந்தவுடன் தாமதமின்றி நோன்பு திறப்பது
- பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும கிடைக்காவிட்டால் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத திறப்பது
- நோன்பு திறந்தவுடன் துஆ ஓதுவது
- அதிகம் (தர்மங்கள்) ஸதக்கா செய்வது.
- குடும்பம்,சொந்தக்காரங்கள்,ஏழைகள்,அநாதைகள் ஆகியோருக்கு உதவுவது
- மற்ற நோன்பாளிகளை அன்புடன் வரவேற்று நோன்புதிறக்கச் செய்வது
- அல்லாஹ்வை நினைத்தல்,திருக்குர்ஆன்ஓதுதல்,ஸலவாத்து ஓதுதல் போன்றவை அதிகம் செய்வது.
நோன்புவைக்க கூடாத நாட்கள்:ஹராமான நாட்கள்:
- இரு பெருநாட்கள்
- துல்ஹஜ்ஜு மாதத்தின் பிறை 11,12,13 ஆகிய ஐந்து நாட்களாகும். நோன்பா?இல்லையா?என சந்தேகத்திக்கும் நாட்கள்
ஸுன்னத்தான நோன்புகளில் சில: அரஃபா நோன்பு
- ஆஷூரா நோன்பு
- ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு
- வாரத்தில் திங்கள்,வியாழன் கிழமைகள்
ரமழான் மாத்த்தின் சிறப்புக்கள்:
- புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டது.
- ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது.
நோன்பின் ஒழுக்கங்கள்:
- நோன்பாளி ஆபாசக் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.
- புறம், கோள், பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.
- வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.
- மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்..
- சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
நோன்பின் நிய்யத்து:
ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பதாக அம்மாதத்தில் ஒவ்வோர் நாள் ஸுப்ஹுக்குமுன் நிய்யத்து வைப்பதுடன் ஃப்ர்ளான அல்லது ஸுன்னத்தான அல்லது களாவான நோன்பு என விவரித்து நிய்யத் வைக்கவேண்டும்.
No comments:
Post a Comment