நோன்பு பற்றி சிறு விள்க்கம்.
யார் மீது நோன்பு கடமை? யாருக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது?
1) பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம்.
2) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தரிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
3) முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
4) சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
5) பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
6) கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் தாய்,நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
7) மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்
3.சலுகையளிக்கப்பட்டவர்கள்
1. நோயாளி :
2.பிரயாணத்தில் உள்ளவர்கள்
3 மாதவிடாய்,மற்றும் பிரசவத் தீட்டுள்ள பெண்கள்.
: இம்மூவரும் நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. வயது முதிந்தவர்கள் : ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
4.தடைசெய்யப்பட்டவர்கள்.
மாதவிடாய்,மற்றும் பிரசவத் தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும்.
5.நோன்பை முறிக்கும் செயல்கள்
1. சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல்
2. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை(மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
3. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.
4. .இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்
5. .வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.
6. ஒளு செய்யும்போது வாய் அதிகமாக கொப்பளித்து,அதனால் தண்ணீர் உட்செல்லுதல்.
7. வாய்க் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கி விட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
8. . காரல்,சளி முதலியவை தொண்டயைவிட்டு நீங்கிவந்தபின் மறுபடியும் விழுங்குதல்.
6. நோன்பை முறிக்காதவை -- :அனுமதிகள்
1. நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.
2. வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது
3. நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண் காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது
4. .சிறு மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.
5. நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது.
6. நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.
7. குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வது தவறில்லை. சுப்ஹு தொழுகைக்காக, குளித்துக் கொண்டாலே போதுமானது.
8. நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண் காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது.
7.நோன்பின் ஸுன்னத்துக்களில் சில:
1. ஸஹர் செய்தல்,
2. சூரியன் மறைந்தவுடன் தாமதமின்றி நோன்பு திறப்பது
3. பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும கிடைக்காவிட்டால் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத திறப்பது
4. நோன்பு திறந்தவுடன் துஆ ஓதுவது
5. அதிகம் (தர்மங்கள்) ஸதக்கா செய்வது.
6. குடும்பம்,சொந்தக்காரங்கள்,ஏழைகள்,அநாதைகள் ஆகியோருக்கு உதவுவது
7. மற்ற நோன்பாளிகளை அன்புடன் வரவேற்று நோன்புதிறக்கச் செய்வது
8. அல்லாஹ்வை நினைத்தல்,திருக்குர்ஆன்ஓதுதல்,ஸலவாத்து ஓதுதல் போன்றவை அதிகம் செய்வது.
8.நோன்புவைக்க கூடாத நாட்கள்:ஹராமான நாட்கள்:
1. இரு பெருநாட்கள்
2. துல்ஹஜ்ஜு மாதத்தின் பிறை 11,12,13 ஆகிய ஐந்து நாட்களாகும்.
3. நோன்பா?இல்லையா?என சந்தேகத்திக்கும் நாட்கள்
9.ஸுன்னத்தான நோன்புகளில் சில:
1. அரஃபா நோன்பு –துல் ஹஜ் பிறை 9
2. ஆஷூரா நோன்பு –முஹர்ரம் பிறை 9 & 10
3. ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு
4. வாரத்தில் திங்கள்,வியாழன் கிழமைகள்
5. ஒவ்வொரு மாதமும் 13,14,15,(முழு நிலா)
10.ரமழான் மாத்த்தின் சிறப்புக்கள்:
1. புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டது.
2.ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது.
11.நோன்பின் ஒழுக்கங்கள்:
1. கண்:நோன்பாளி ஆபாசக் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.
2.நாவு: புறம், கோள், பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.
3. காது: வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.
4.மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்..
5.சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
12.நோன்பின் நிய்யத்து:
ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பதாக அம்மாதத்தில் ஒவ்வோர் நாள் ஸுப்ஹுக்குமுன் நிய்யத்து வைப்பதுடன் ஃப்ர்ளான அல்லது ஸுன்னத்தான அல்லது களாவான நோன்பு என விவரித்து நிய்யத் வைக்கவேண்டும்.
13.‘முத்து” என்றால் என்ன?அதன் விளக்கம்?
நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு கொடுக்கப்படும் உணவுக்கு ’முத்து’ எனப்படும்.
இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு ’முத்து’ (750 கிராம்) ஆகும்.
கழாவான நோன்பை நோற்காது விட்டுவிட்டு, ரமழான் மாதத்திற்குப் பிறகு அடுத்த ரமழான் வரும் வரைக்கும் வேண்டுமென்று அதன் கழாவை நிறைவேற்றாது விட்டால், கழாவானதை செய்வதுடன் ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு முத்து (750 கிராம்) உணவு ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment