குறிப்பிட்ட காலங்களில் பெண்களின் கருப்பையின் ஓரப்பகுதியிலிருந்து வெளிவரும் இயற்கை உதிரப்போக்கு (Hailu) மாதவிடாய் என்று சொல்லப்படும்.இது ஒவ்வொரு உயிரின்ங்களுக்கும் ஏற்படுவதுண்டு.இமாம்களின் ஆய்வுப்படி ஒன்பது வயதில் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்படலாம்.உடல்,நாடு,காலச்சூல்நிலைக்கேற்ப இதைவிடத் தாமதமாகவும் ஏற்படலாம்.ஒன்பது வயதில் தொடங்கும் மாதவிடாய் 55--60 வயதை அடையும்பொழுது நின்றுவிடும்.
1.மாதவிடாய் ஏற்படும் காலஅளவு என்ன?
குறைந்தபட்ச அளவு 24மணி நேரங்கள்;.
அதிகபட்ச அளவு 15 நாட்கள்.
15 நாட்களுக்குள் ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்து அதன் காலம் மாறுபடலாம்.6 or ஏழு நாட்கள் or அதற்கு மேலும்.
2. 24மணி நேரத்தை விட குறைவாகவோ 15 நாட்களை விட அதிகமாகவோ உதிரம்(இரத்தம்)இருந்தால்?
அவை ‘HAILU’ ஆக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.அது நோயின் காரணமாக ஏற்படலாம்
.
.
3.நோயின் காரணமாக ஏற்படும் நிலைமைக்கு என்ன பெயர்?
’இஸ்திஹாலா’ உதிரப்போக்கு என்று பெயர்
.
.
4.இரண்டு ஹைலுக்கு இடைப்பட்ட அவசியமான சுத்தமான நாட்கள் எத்தனை?
அவசியம் 15 நாட்கள் சுத்தமான நாட்களாக இருக்கவேண்டும்.
அதாவது உதிரப்போக்கு இல்லாதநிலையில் இருக்க வேண்டும்.
5.பதினைந்து நாட்களுக்குள் இரத்தப்போக்கு ஏற்பட்டால்?
அது ஹைலு -மாதவிடாய்- கிடையாது.அது உதிரப் பெரும்போக்கு எனப்படும்.
6.ஒருநாள் விட்டு ஒருநாள் or ஒருநேரம் விட்டு ஒருநேரம் வரும் இரத்தங்கள் எவ்வாறு கருதப்படும்?
இவையாவும் ’ஹைல்’ஆகவே கருதப்படும்.
இருப்பினும் கவனத்தில் கொள்ளவேண்டியது :24மணி நேரத்தை விடக் குறையாமலும் 15நாட்களை விட அதிகமாகாமலும் இருத்தல் வேண்டும்.
7.பதினைந்து நாட்களுக்கு மேல் ஏற்படும் இரத்தத்திற்கு(உதிரப் பெரும்போக்கு) என்ன பெயர்?
இஸ்திஹாலா
8.இஸ்திஹாலா உடைய நாட்களில் தொழுகை மற்ற அமல்கள் எப்படி செய்யவேண்டும்?
a.இந்நிலையில் பெண்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் தங்களின் மறைவிடங்களைக் கழுவி இரத்தம் வெளியேறாதவாறு அதற்குரிய பாதுகாப்போடு இருக்க வேண்டும்.
b.ஒவ்வொரு வக்திற்கும்(நேரத்திற்கும்) உளு செய்யவேண்டும்.அதாவது ஒரு உளுவைக் கொண்டு ஒரு ஃப்ர்ளு தொழுகைதான் தொழ முடியும்.ஸுன்னத்தான தொழுகை அதிகம் தொழலாம்.
c.ரமழான் மாதம் நோன்பு வைப்பது கடமயாகும்.
d.ஹைலு உடைய காலங்களில் செய்யக் கூடாதவை (ஹராமானவை) அனைத்தும் செய்யலாம் (ஹலாலாகும்).
f.பள்ளிவாசல் செல்வது அங்கு தங்குவது போன்றவை தவிர்ந்துக் கொள்ளுதல்.
No comments:
Post a Comment