F "DEEN WE NEED" --- வகுப்பில்

Friday, March 15, 2013


‘துஆ’ ஒரு வணக்கமாகும்



 “பிரார்த்தனையே வணக்கமாகும்” என (நபி (ஸல்அவர்கள் கூறியுள்ளார்கள்அந்த வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ் (ஜல்தவிர வேறு யாருமில்லை.. 

மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் செல்வமும் வறுமையும் மாறி மாறி வருவதுண்டு. ஒரு முஸ்லிம் செல்வத்தைக் கண்டு பெருமைப்படவோ துன்பம் வறுமையைக் கண்டு சலிப்படையவோ கூடாது. நல்லதைக் கண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். துன்பங்கள் ஏற்படும் போது பொறுமையுடனிருந்து அல்லாஹ்விடம்துஆகேட்க வேண்டும்.
இறைவன் தனது அடியான் தன்னிடம் கேட்பதை விரும்புகிறான். தன்னிடம் கேட்போனை வெறும் கையோடு திருப்பியனுப்ப வெட்கப் படுகிறான் என நபி(ஸல்)கூறுகிறார்கள்
ஓர் ஏழை தனது வறுமை நீங்க மனிதர்களிடம் கேட்டால் கேட்டுக்கொண்டே இருப்பான். அல்லாஹ்விடம் கேட்டால் அவனது வறுமை நீங்கிவிடும் என்பது நம்மில் அனவருக்கும் தெரியும்.

(நபியே) உம்மிடம் எனது அடியார் என்னைப் பற்றிக் கேட்டால்நிச்சயமாக நான் மிகச் சமீபமாகவே இருக்கின்றேன். என்னை அழைத்தால் அழைப்போனின் அழைப்புக்கு நான் விடையளிப்பேன். ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும் என்னையே விசுவாசிக்கவும் அவர்கள் நேர்வழியடைலாம். (2:186)என்றும்

நீங்கள் தாழ்மையாகவும் அமைதியாகவும் (உங்களுக்குத் தேவையானவற்றை) பிரார்த்தனை செய்யுங்கள்  நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை விரும்புவதில்லை. 7:55 என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

நாம் துஆ கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் எமது துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லையே எனப் பலரும் அங்கலாய்க்கின்றனர்.ஏன் தெரியுமா?
 பிரார்த்தனை செய்யும்போது நாம் சில ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
1. தூய மனதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
2. பிரர்த்தனையைத் துவங்கும் போதும்முடிக்கும் போதும்அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
3. பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும்உறுதியோடும்பிரார்த்தனை செய்ய வேண்டும்.
எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால்   மூன்றில் ஒன்றாவது அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு கிடைக்கும்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
1. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான்.
2. அல்லது (அப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல்) அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான்.
3. அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள்,அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள்அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது எனக்கூறினார்கள்..
 ‘துஆகேட்பதன் முக்கியத்தை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
1. ‘துஆவணக்கத்தின் மூளை. (திர்மிதி)
2. துஆவைத் தவிர வேறொன்றும் கழாவை (விதியை) மாற்றி விடாது. நன்மை செய்வதன்றி வேறொன்றும் வயதை அதிகரிக்கச் செய்யாது. (திர்மிதி)
3. மூவரின் பிரார்த்தனை வீண்போகாது, நேர்மையான தலைவன் ,நோன்பாளி, அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை. (அஹ்மத்) என நபி(ஸல்)அவர்கள் நவின்றுள்ளார்கள்.

இனி ஒர் வரலாற்றுச் செய்தி கேட்போம்


இமாம் இப்றாஹீம் இப்னு அத்ஹம்(ரஹ்அவர்களிடம் பஸரா நாட்டு மக்கள் எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டனர்உபதேசமாஎன்ன உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் இமாமவர்கள்.

இறைவன் தனது திரு வேதத்தில்என்னை அழையுங்கள்நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்’ (40:60) எனக் கூறியுள்ளான்நாங்கள் அவனிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லையேஎங்கள் துஆக்கள் கபூலாவதில்லையேஏன்ஏன்று மக்கள் கேட்டார்கள்.

நீங்கள் உயிரோட்டமுள்ள இதயங்களிலிருந்து இறைவனை அழைப்பதில்லைஉங்களிடம் காணப்படவேண்டிய பத்து விஷயங்கள் இல்லாது போய்விட்டதால் உங்கள் இதயங்களில் ஜீவனே இல்லைஎன்று பதிலளித்தார் அந்த அறிஞர் பெருமகனார்.

பத்து விஷயங்களாஅவை என்னஎன்று வியப்போடு வினவினார்கள் அந்த மக்கள்.
மேதை இப்றாஹீம் அத்ஹம் பதிலளித்தார்:-
1. இறைவனை நீங்கள் உணருகிறீர்கள்ஆனால்அவன் ஏவிய வழிகளிலே நடந்து செயல்படத் தவறிவிட்டீர்கள்.
2. திருக்குர்ஆனை ஓதுகிறீர்கள்ஆனால்அதைச் சரியாகப் புரிந்து கொண்டு நீங்கள் செயலாற்றுவதில்லை.
3. பெருமானார்(ஸல்அவர்களின் சமுதாயத்தவர் நாங்கள்அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் எனப் பெருமைபப்டுகிறீர்கள்ஆனால்அவர்களது புனித வாழ்வு முறையை நீங்கள் பின்பற்றுவது கிடையாது.
4. சுவர்க்கத்தைப்பற்றி நிறைய பேசுகிறீhகள்அதற்குச் செல்லவேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்ஆனால்அதற்குத் தகுதியானவர்களாக ஆக எந்த முயற்சியும் நீங்கள் செய்வதில்லையே!
5. நரகத்திற்குப் பயப்படுவதாகச் சொல்கிறீர்கள்ஆனால்நீங்கள் செய்யும் செயல்களோ நரகத்தின் பால் உங்களை இழுத்துச் செல்வதாகவே உள்ளனஆனால்நீங்கள் அவற்றைவிட்டும் தவிர்ந்து கொள்வதாக இல்லையே!
6. மரணம் நிச்சயமானது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்ஆனால்இந்த உலகமே சதமென்று எண்ணிக் கொண்டு செயலாற்றுகின்றீர்கள்.
7. உங்கள் சகோதரர்களிடம் உள்ள சிறுகுறை கூட உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறதுஆனாலஉங்களிடம் மலிந்துள்ள பல குறைகளை நீங்கள் எண்ணிப் பார்ப்பதே கிடையாது.
8. ஷைத்தானை வெறுப்பதாகவும் அவன் உங்களின் மிகப்பெரிய எதிரி என்றும் வெளியிலே பேசிக் கொள்கிறீர்கள்ஆனால்அந்தரங்கத்திலோ அவனை வரவேற்று விருந்தளித்து கொஞ்சிக் குலாவி அவனுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள்.
9. இறைவன் உங்களிக்களித்துள்ள அருட் பெரும் கொடைகளை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்ஆனால்அவனுக்கு நன்றியுள்ள அடியானாக நீங்கள் நடந்து கொள்வதில்லையே?
10. இறந்தோரை புதைகுழி வரை சென்று புதைத்துவிடுகிறீர்கள்ஆனால்அதிலிருந்து நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையே?
இந்த நிலையிலுள்ள உங்கள் அழைப்பிற்கு (துஆவுக்குஇறைவன் எப்படி பதிலளிப்பான்?
இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து நடக்கலானார் அந்த மாமேதை.
மக்களோ தங்களின் நிலையை எண்ணி மனம் உருகினார்கள்தங்களின் குறைகளை அசை போடலானார்கள்.
நாமோ நம் குறைகளைப்பற்றி எந்தக்கவலையும்படாமல் நம்மைத் திருத்திக்கொள்ளாமல் நடமாடிக் கொண்டிருக்கிறோமேஇன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வாழ்வு?.
சிந்திப்போம்!செயல்படுவோம்! பிரார்த்திப்போம்!
யா அல்லாஹ்! எங்கள் பிரார்த்தனைகளை ஏற்று எங்களது பாவங்களை மன்னிப்பாயாக! என்று வேண்டியவளாக உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தஆலா   வபரக்காத்துஹு.


No comments:

Post a Comment