F "DEEN WE NEED" --- வகுப்பில்

Friday, March 15, 2013


நோன்பு


ரமளான் மாதம் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.மனிதனின் உடலையும், உள்ளத்தையும், சிந்தனைகளையும் பக்குவப்படுத்தி இவ்வுலகிலும் மறு உலகிலும் இன்பமான வாழ்வுக்கு பயிற்சியளிக்கும் திட்டங்களைக் கொண்டதே இந்த ரமழான் நோன்பாகும் .

இறையச்சம் ஏற்பட்டு உடல், உள்ளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் வாய்ப்பு ஓர் முஸ்லிமுக்கு கிடைக்கிறது.இதை மருத்துவ உலகமும் உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளது.பல ஆராய்ச்சிகளும் அதற்கு அத்தாட்சி அளிக்கின்றன.

நோன்பு என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கடமையல்ல. இதற்கு முன் வாழ்ந்த எல்லா சமூகத்தாருக்கும் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அவர்களும் நோன்பிருந்து வந்ததை அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டவாறே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் பயபக்தியுடையவர்களாகலாம் (2:183)

ரமளான் மாதத்தில் தன் அடியார்கள் நோன்பு நோற்க வேண்டுமென இறைவன் பின்வருமாறு கட்டளையிடுகிறான்.
فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ
உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்க வேண்டும்’.(2:185)

 யார் மீது நோன்பு கடமை? என்றால்,

1) பருவமடைந்த முஸ்லிமான ஆண்பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம்.

 நோன்பு யாருக்கு கடமையில்லை ? என்றால்,
 நன்மைதீமையை பிரித்தரிய முடியாதவர்கள் மூளை வளர்ச்சி இல்லாதவர்கள்வயோதிகத்தால் புத்தி மாறியவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
 நோன்பை விடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள்   யாரென்றால்
1. நோயாளி :                                   
2.பிரயாணத்தில் உள்ளவர்கள்
3 மாதவிடாய்,மற்றும் குழந்தைப் பெற்றத் தீட்டுள்ள  பெண்கள்.
                     :   இம்மூவரும்  நோன்பை ரமழானுக்குப் பிறகு நோன்பு பிடிக்க வேண்டும்
4. வயது முதிந்தவர்கள் : ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
.தடைசெய்யப்பட்டவர்கள்.
மாதவிடாய் ,மற்றும் பிரசவத் தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும்.(ஹைலு ,நிஃபாஸ் உள்ள பெண்கள்)
ரமழானின் சிறப்பு
நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குகுர்ஆன்வேதம் ரமளானின்லைலத்துல் கத்ர்இரவில் தான் அருளப்பட்டது
இம்மாதத்தில் தான் அல்லாஹ் அதிகமான நன்மைகளை வழங்குகிறான். ஏராளமான அருட்கொடைகளை அடியார்களுக்கு வழங்குகிறான். நன்மைகளை நல்கி அருட்கொடைகளை அள்ளி வழங்கும் புனித மாதம்! வெகுமதிகளையும், அன்பளிப்புகளையும் வாரிவாரி வழங்கும் ஏற்றமிகு மாதம்!!
இந்த மாதத்தின் மகிமையை இறைவனே தனது திருமறையில் புகழ்ந்து பேசுகிறான்:
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ
ரமளான் மாதம் எத்தகையமகத்துவமுடையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக்கூடியதாகவும், நன்மை தீமைகளை பிரித்தறிவக்கக்கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன்(என்னும் இவ்வேதம்)அருளப்பெற்றது…… ஆகவே யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். (2:185)
 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :
இம்மாதத்தின் ஆரம்பம் அருள்மிக்கதாகவும்
 நடுப்பகுதி பாவமன்னிப்பை வழங்கக் கூடியதாகவும்,
இறுதிப் பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை வழங்கக்கூடியதாகவும் உள்ளது.
மறுமை நாளில் நோன்பாளிக்காக அவனது நோன்பு சிபாரிசு செய்யும்.அன்று அவர் மகிழ்வுடன் அல்லாஹ்வை சந்திப்பார்.
சொர்கத்தின் எட்டுவாயில்களில்ரய்யான்என்னும் வாசலும் ஒன்று.அதில் நோன்பாளிகள மட்டுமே நுழைவார்கள்.
மேலும், ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்பப்படுகின்றன. மேலும், சைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. (நூல் : புகாரி )
இம்மாதத்தில்சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுன்றனஎன்றால்நல்லமல்கள் பெருகுவதற்கும் , அமல்கள் செய்பவர்களுக்கு ஆர்வமூட்டுவதற்கும் தான்!’
அவ்வாறேநரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றனஎன்றால்இறைநம்பிக்கையாளர்களுடைய பாவங்கள் குறைவதற்காகவும், தீய செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகவும் தான்!
இம்மாதத்தில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெறும் சிறந்த பயிற்சி ஏனைய மாதங்களிலும் தீமைகள் புரியாது மக்களைக் காத்து ஆண்டுமுழுவதும் தூய வாழ்வு வாழ துணை புரிகிறது
.வல்ல நாயன் ;அல்லாஹ் ரமளான் மாதத்திற்கு ஏனைய மாதங்களிற்கில்லாத பல சிறப்பம்சங்களை வழங்கியுள்ளான்.அவற்றுள் சில:-
1. நோன்பு அல்லாஹ்வுக்குரிய வழிபாடு. அது இறை நெருக்கத்தை அதிகரிக்கிறது.
2. நோன்பு இறை நினைவை ஏற்படுத்துகிறது
4. மனதைக் கட்டுப்படுத்தப் பயிற்சியளிக்கிறது
6. ஷைத்தானின் ஊசலாட்டங்களை கட்டுப்படுத்கிறது.
7. உடல் நலனைப் பேணுகிறது
8. பாவத்திற்கு பரிகரமாகிறது.
9. நோன்பாளியின் துஆ மறுக்கப்படுவதில்லை.இறைவனால்அங்கீகரிக்கப்படும்.
நிச்சயமாக நோன்பாளி நோன்புதிறக்கும் வேளையில் கேட்கும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ( ஸுனனு இப்னு மாஜா
எனவே நாம் ரமளானின் முழுமையான நன்மைகள் யாவும் பெற்று ரமளானின் ஒழுக்க  நெறிகளையும், மாண்புகளையும் வாழ்வு முழுவதும் கடைபிடிக்க வல்ல ரஹ்மான் அருள் பொழிவானாக! ஆமீன்

No comments:

Post a Comment