F "DEEN WE NEED" --- வகுப்பில்

Friday, March 22, 2013

அல்-குர்ஆன்

இது உலக மக்கள் அனைவருக்காகவும் இறக்கி அருளப்பட்டதாகும்.இது அல்லாஹ் உடைய வேதமாகும் அதில் எந்த சந்தேகமும் இல்லைஇதுவே இறுதி வேதமாகும்.இதை அல்லாஹ்  லைலத்துல் கத்ர் என்ற புனிதமிக்க இரவில் இறக்கிவைத்தான்.வானவர் ஜிப்ரயில்(அலைஹி)  மூலம் இதை  படிப்படியாக,ஒவ்வொரு வசனங்களாக இறக்கிவைத்தான்.

இன்றுவரை எந்த விதமான மாற்றங்கள்  இடைச் செருகல்கள் இல்லாமல் மக்களின் உள்ளங்களிலும்எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டு வரும் இறை வேதமாகும்அன்று குரைஷிக் காஃபிர்கள் அல்குர் ஆனை அழித்திட-மறைத்திட-எரித்திட எத்தனையோ முயற்சிகள் செய்தனர்இறுதியில் முடியாது தோற்றுப்போய் பணிந்தனர்.போட்டி மறை ஈட்டிடுவோம் என சவாலிட்டவரிடம்ஓரே ஓரு வசனத்தையாவது கொண்டு  வாருங்கள் என்றும் அல்குர்ஆன் கேட்டது. திருமறையின் இந்தஅறைகூவல் அன்று மட்டுமல்ல 1400 ஆண்டுகளாக இன்று வரை இந்த உலகத்தாரை நோக்கி விடுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இதுவரை எவரும் முன்வரவுமில்லைஇனியும், ஏன் இறுதி நாள் வரையும் எவராலும் உருவாக்கிடவும் முடியாது.

அல்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது தான் என்பதற்கு மேலும் பல வரலாற்றுச் சான்றுகள் அதிலே மின்னிக்கொண்டிருக்கின்றனஅதில் ஒரு சிலவற்றைக் கூறுகிறேன்


1.நூஹ் நபியின் கப்பல்


2.ஃபிர்அவ்னின் பாதுகாக்கப்பட்ட சடலம்.


3.ஆது,தமூது சமூகத்தினரின் குகை இல்லங்கள்



4.ஸபா நாட்டுத் தோட்டங்கள்


அல்லாஹ்தஆலா மனிதர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகப் பெரிய அருட்கொடயாக இருப்பது திருக்குரானாகும்.அதை ஓதுபவர்களுக்கு அல்லாஹ் பல சிறப்புக்களையும் வழங்கியுள்ளான்.அதாவது


*நீங்கள் குர்ஆனை ஓதுங்கள், நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு பரிந்துரை செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)



*குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் மறுமை நாளையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)


*உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: புகாரி)


*குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன்படி செயல்பட்டவர்கள் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார்
கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)


*அல்லாஹ்வுடைய வேதமாகிய குர்ஆனிலிருந்து யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும்.(ஆதாரம்: திர்மிதி)

எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப் போல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: திர்மிதி)


*இது முழு மனித சமூகத்துக்கும் உரிய வாழ்க்கை வழிகாட்டி நூலாகும்.


*முன்னைய இறை வேதங்களின் அடிப்படைகளையும் உள்ளடக்கிய பூரண வாழ்க்கைத் திட்டமாகும் : (அத்தி : 42 , வசனம் 13) 

*மிகைக்க முடியாத சவால்களுடன் வந்த அற்புதமான வேத நூலாகும்!


இவ்வுலகில் வாழும் அனைவரும் ஒரு நல்ல உதாரணமாக இருப்பதற்குத்தான் விரும்புவார்கள்இப்படி எல்லோருமே விரும்பக்கூடிய ஒரு நல்ல உதாரணத்தைப் பெற வேண்டும் என்றால் இந்தக் குர்ஆனை ஓதுவதன் மூலமே இந்தச் சிறப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்


இதில் பல அத்தாட்சிகளையும் நமக்கு விளக்கியுள்ளான்.


அறிவியல்வாழ்க்கை சட்டம்,நல்ல பண்புகள்,உலகம் தோன்றிய வரலாறு,மறுமை நாள் என்று பல விஷயங்களை அல்லாஹ் இந்த குரான் மூலம் நமக்கு கற்றுதருகிரான்.இந்த குரானை நாம் பேணிப்பாதுகாக்கவேண்டும்.அதற்காக பெட்டியில் வைத்து பூட்டுவதுஅல்லஇதை  நன்றாக ஓதி நாமும் விளங்கிமற்றவர்களுக்கும் எடுத்துசொல்லவேண்டும்.இதில் நமக்கு பல படிப்பினைகள் இருக்கிறது.
அல்லாஹ் நமக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பதற்காகவே இந்த ‘குரானை’ நம் மீது இறக்கியுள்ளான்.ஆனால் நாம் உண்மையிலேயே அச்சப்படுகிறோமா..?சற்றுசிந்திப்போம்.

ஆனால் அல்லாஹ் சொல்கிறான் இதை நாம் ஒரு மலையின் மீது இறக்கியிருந்தால் அது அல்லாஹ் வின் அச்சத்தால் பிளந்து போய்விடும் என்று …அப்படி என்றால் ஆறு அறிவு படைத்தமனிதன்,சிந்துத்து செயல் படும் மனிதன் எவ்வாறு அஞ்சவேண்டும் என்பதை  அல்லாஹ்  நமக்கு சுட்டிக்காட்டியுள்ளான்.



ஆகவே நாம் இந்த குரானை உள்ளச்சத்தோடு ஓதி இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற அல்லாஹ் அருள்புரிவானாக….ஆமீன்

No comments:

Post a Comment