1.ஜும்ஆ தொழுகை:
நேரம்: வெள்ளிக் கிழமை லுஹர் நேரத்தில் இமாமுடன் சேர்ந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழவேண்டும்.
முன் ஸுன்னத்துக்கள்,பின் ஸுன்னத்துக்கள் நான்கு ரக்அத்துக்கள் ஆகும்.
பருவ வயதை அடைந்தவர்கள் நாற்பது பேர் க்லந்து கொள்ள வேண்டும்.
இத்தொழுகையில் இமாம் இரண்டு குத்பாக்கள்(speech)ஓதுவார்.
அதில் 1,அல்லாஹ்வை புகழ்வ்து
2.நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுவது
3.தக்வாவை(இறை அச்சம்)க் கொண்டு உபதேசிப்பது
4.குர்ஆன வ்சனத்திலிருந்து ஓதி விளக்கம் அளித்தல்
5.இரண்டாம் குத்பாவில் முஃமின்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிப் பிரார்த்தித்தல்.
இவையனைத்தும் ஜுமஆவின் ஃப்ர்ளுகள் ஆகும்.
இமாம் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிலிருந்து எழும்பிய பிறகு ஒருவன் சேர்ந்தால்?
ஜும்ஆவுடைய நிய்யத்தில் இமாமை பின்தொடர்ந்து நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும்.
இமாம் ஸலாம் கொடுத்தபின் ஒருவன் வ்ந்தால் ?
ளுஹருடைய நிய்யத் வைத்து நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும்
ஜும்ஆ தொழுகையின் சிறப்புக்கள்
ஒப்புக் கொள்ளப்படும் ஒரு துஆ நேரம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 935)
"ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 342, திர்மிதி 198)
"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 881)
இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?
இதயங்கள் இறுகி விடும்
"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 460)
No comments:
Post a Comment