ஸகாத் பற்றி சிறு விளக்கம்
ஸகாத் என்றால் என்ன?
இதன் பொருள் தூய்மையாக்குதல் என்பதாகும்.
ஒருவன் தனது அனைத்து பொருள்களிலிருந்தும் நாற்பதில் ஒரு பகுதியை எடுத்து ஏழைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவனிடம் உள்ள மற்ற பொருளும் தூய்மை பெறுகிறது.
மேலும் அவனுடைய உள்ளமும் கஞ்சத்தனத்திலிருந்து தூய்மை பெறுகிறது
.
ஸகாத்தின் நோக்கம் என்ன ?
பணம் உடையவர்களிடம் மட்டுமே பணம் இருக்க்க் கூடாது.அது எல்லா மக்களையும் சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும்.
ஸகாத் கடமையான பொருட்கள்:
ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது:
1) தங்கம்
யாரிடமேனும் தமது அத்தியாவசியப் பொருட்களான உணவு,உடை, உறையுள்,தொழிற் கருவிகள்போக 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால் அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஸகாத் கொடுத்தாக வேண்டும்.
குறிப்பு:
சேமிப்புடைய நோக்கம் மட்டும் இருக்குமானால் கண்டிப்பாக கொடுக்கவேண்டும்.
2)வெள்ளி
3)வியாபாரப் பொருட்கள்
4) கால் நடைகள் –ஆடு,மாடு, ஒட்டகம்.
5) விவசாய பொருட்கள்.—grains
தானியங்களைப் பொறுத்தவரை. விவசாயம் செய்து விளைந்து அறுவடை செய்யும் காலங்களில் அதற்குரிய ஸகாத்தை கணக்கி;ட்டுக் கொடுக்க வேண்டும்
வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு கட்டாயம் ஸகாத் வழங்கியே ஆக வேண்டும்.
.
No comments:
Post a Comment