ஹஜ் பற்றி சிறு விளக்கம்
1.ஹஜ் என்றால் என்ன?
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் ஆகும்.
ஹஜ் என்ற அரபுச் சொல்லிற்கு (புனிதமான ஒன்றை) நாடிச் செல்லல் என்பது பொருளாகும்.
செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ள ஒரு முஸ்லிம் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்கா நகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ் எனப்படும்.
2.ஹஜ் யார் மீது கடமையாகும்?
பிரயாணம் செய்வதற்கான உடல் ஆரோக்கியமும் ,பொருளாதார வசதியும் உள்ள ,பருவ வயதை அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஹஜ் செய்வது கடமையாகும்.
3.ஹஜ்ஜின் சிறப்பைப் பற்றி ஒரு சில நபி மொழிகள் கூறு
1 நாம் செய்யும் செயல்களில் சிறந்தது எது?' என்று நபியிடம் ஒருவர் வந்து கேட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்று பதிலுரைத்தார்கள்.
'அதன்பின் எது?' என கேட்கப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள்.
'அதன்பின் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, ' ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்' என்றார்கள்'
2.”ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கம் தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
3.ஒரு பெண்மணி நபியிடம் வந்து ”எனது தாய் ஹஜ் செய்யாமல் மரணமடைந்து விட்டார்”என்று கூறினார்.
அதற்கு நபியவர்கள். “உன் தாய்க்காக நீ ஹஜ் செய்துக் கொள்” என பதில் கூறினார்கள்
4.எல்லா வசதிகளும் இருந்து ஹஜ் செய்யாதவனின் நிலை என்ன?
எல்லாவிதமான வசதி, வாய்ப்புக்களும் இருந்தும் ஹஜ் செய்யாமல் இருப்பவர்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும்போது, “ வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர் யஹுதியாகவோ,(Jew) நஸாராவாகவோ(Christian) மரணிக்கட்டும்” என்று சபித்துக் கூறியுள்ளார்கள்.(நவூதுபில்லாஹ்—அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!)
அல்லாஹ் நம்மனைவ்ருக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவானாக்! ஆமீன்.
No comments:
Post a Comment